நெல்லையில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு பொருட்கள்
நெல்லையில் சோதனை சாவடிகளில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதிகளில் மொத்தம் 30 சோதனைச் சாவடிகளில் சுழற்சிமுறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பாளையங்கோட்டை வேளாங்கண்ணி ஆஸ்பத்திரி சார்பில், கொசு ஒழிப்பு மட்டை, சானிடைசர், முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபு கலந்து கொண்டு, போலீசாருக்கு கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கினார். துணை கமிஷனர்கள் மகேஷ்குமார் (குற்றம் மற்றும் போக்குவரத்து), சீனிவாசன் (சட்டம் - ஒழுங்கு), நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், தலைமை டாக்டர் ராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story