நெல்லையில் 110 வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை


நெல்லையில் 110 வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 2 Jun 2021 2:13 AM IST (Updated: 2 Jun 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர பகுதியில் 110 வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை நேற்று தொடங்கியது.

நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் வருகிற 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி மண்டல அதிகாரிகள் நேற்று முதல் அனுமதி வழங்கினார்கள். ஒவ்வொரு வார்டிற்கும் இரண்டு வாகனங்கள் என 55 வார்டுக்கு 110 வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி நேற்று காலை முதல் மளிகைப் பொருட்கள் விற்பனை தொடங்கியது.

இந்த மளிகை பொருட்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்களில் வீதி வீதியாக சென்று விற்பனை செய்யப்படும். வாகனங்களுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்வதற்காக மொத்த விற்பனை கடைகள் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை திறந்திருக்கும். ஏற்கனவே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க காய்கறி, பழங்கள் முதலியவை வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ஆன்லைன் மூலமும், போன் மூலமும் ஆர்டர் செய்து மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி, பழங்கள் வாங்கி கொள்ளலாம்.

Next Story