ரூ.1 லட்சம் வழங்கிய பழனி பெண் டாக்டர்
பழனியை சேர்ந்த பெண் டாக்டர் ரூ.1 லட்சத்தை கொரோனா நிவராண நிதிக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் வழங்கினார்.
பழனி:
கொரோனா நிவாரண பணிகளுக்காக, முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் பழனியை சேர்ந்த பெண் டாக்டரான கீதா என்பவர் ரூ.1 லட்சத்தை, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
நேற்று முன்தினம் பழனிக்கு வந்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை டாக்டர் கீதா வழங்கினார்.
அப்போது கலெக்டர் விஜயலட்சுமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., கீதாவின் கணவர் சுப்புராஜ் உடனிருந்தனர்.
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய பெண் டாக்டரை அமைச்சர் பாராட்டினார்.
Related Tags :
Next Story