சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு


சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Jun 2021 2:55 AM IST (Updated: 2 Jun 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த உதயநத்தம் அய்யனார் கோவில் அருகே உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 42), பாரதிராஜா(43), துரைராஜ்(48), கலியபெருமாள்(50) ஆகியோர் பணம் வைத்து சூதாடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சூதாடிய 4 பேரையும் பிடித்து விசாரித்தார். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Next Story