முககவசம் விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய சமூக சேவகர்
முககவசம் விற்று கிடைத்த ரூ.14 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு சமூக சேவகர் ஒருவர் வழங்கினார்.
நெல்லை:
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பாபுராஜ். சமூக சேவகர். இவர் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குதற்காக, வீடு வீடாக சென்று மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முககவசங்கள் விற்று அதன்மூலம் ரூ.14 ஆயிரம் நிதி திரட்டினார். அந்த நிதியை நேற்று முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் வழங்கினார்.
சமூக சேவகர் பாபுராஜ் ஏற்கனவே குஜராத் நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பஸ் நிலையங்களில் அமர்ந்து ஷூ பாலீஷ் போட்டு நிதி திரட்டி நிதிகளை அனுப்பி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story