மார்ஷல் நேசமணி சிலைக்கு, அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவிப்பு
மார்ஷல் நேசமணி நினைவு நாளையொட்டி அவருடைய சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
மார்ஷல் நேசமணி நினைவு நாளையொட்டி அவருடைய சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
மார்ஷல் நேசமணி நினைவு தினம்
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த இன்றைய குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய நடந்த போராட்டத்தின் முக்கிய தலைவராக விளங்கியவர் குமரித் தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி ஆவார்.
அவருடைய 53-வது நினைவு தினம் நேற்று ஆகும். இதையொட்டி குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நாகர்கோவிலில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் மணி மண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மரியாதை செலுத்திய அமைச்சர்
மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மார்ஷல் நேசமணி உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதில் விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), விஜயதரணி (விளவங்கோடு), முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், பால்வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மார்ஷல் நேசமணியின் மகன்வழி பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் (பொறுப்பு) சொர்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story