சுரண்டையில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றம்


சுரண்டையில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றம்
x
தினத்தந்தி 2 Jun 2021 3:30 AM IST (Updated: 2 Jun 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.

சுரண்டை:
சுரண்டை நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலடிப்பட்டி பகுதியில் இருந்து ஆனைகுளம் விலக்கு செல்லும் ரோட்டில் மின்கம்பம் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றினால் சேதமடைந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை சுரண்டை நகரப்பகுதி மின்வாரிய உதவி மின்பொறியாளர் விக்னேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுரண்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வனஜா ஆலோசனையின் பேரில் ஊழியர்கள் அங்கு வந்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். 

Next Story