பெங்களூரூவில் இருந்து கடத்தி வந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 2 பேர் கைது


பெங்களூரூவில் இருந்து கடத்தி வந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 10:20 AM IST (Updated: 2 Jun 2021 10:20 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரூவில் இருந்து கடத்தி வந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வேளச்சேரி போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது வீட்டு வசதி வாரிய காலனி 9-வது தெருவில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பதுக்கி வைத்திருந்த 180 மிலி அளவு கொண்ட சுமார் 300 பாக்கெட்டுகள் மதுவையும் ரூ.51 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

கொரோனா முழு ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து விற்பனை செய்த கார்த்திக்ராஜா (வயது 25), மாஸ் கார்த்திக் (28) ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story