ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கம்
கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமா நிறுத்தப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் ஜோலார்பேட்டையில் இருந்து மீண்டும் இயக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை
ரெயில்கள் நிறுத்தம்
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் வருகிற 7-ந் ்தேதி வரை முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ் நாட்டில் பஸ்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று முக்கிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி, ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் சில ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
மீண்டும் இயக்கம்
அதன்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
இந்த ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கோயம்புத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ், ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களும் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story