பிறந்த 15 மணி நேரத்தில் குழந்தைக்கு கொரோனா தாய்க்கு தொற்று இல்லை
பிறந்த 15 மணி நேரத்தில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தாய்க்கு தொற்று இல்லை.
பால்கர்,
பால்கர் மாவட்டம் தார்சேத் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பால்கர் டவுனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 15 மணி நேரத்தில் குழந்தைக்கும், தாய்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் தாய்க்கு தொற்று பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவு வெளியானது.
இதையடுத்து தொற்று பாதித்த பச்சிளம் குழந்தை ஜவஹர் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பால்கர் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story