ஊரடங்கை மீறிய 100 பேரின் வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கை மீறிய 100 பேரின் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Jun 2021 9:40 PM IST (Updated: 2 Jun 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறிய 100 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, ஏட்டுகள் நீலகண்டன், சம்பத், சுரேஷ் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது  அத்தியாவசிய தேவைக்காக செல்கிறோம் என்ற பெயரில் ஊரடங்கை மீறி தேவையின்றி சாலைகளில் உலா வந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story