மூங்கில்துறைப்பட்டு ரிஷிவந்தியம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் சிக்கினர்
மூங்கில்துறைப்பட்டு ரிஷிவந்தியம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் சிக்கினர்
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மூலக்காடு பகுதிகளில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அதே பகுதியில் மறைவான இடத்தில் தனித்தனியாக சாராயம் விற்ற மூலகாடு பகுதியைச் சேர்ந்த வேலூ(வயது 40), புதுப்பட்டு தட்சிணாமூர்த்தி(27), ராவத்த நல்லூர் ராமமூர்த்தி(48) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிப்பிரிவு ஏட்டு கோபி மற்றும் போலீசார் பாசார் கிராமத்தில் ரோந்து சென்றபோது அங்கு வீட்டில் சாராயம் விற்ற ஏழுமலை மகன் மணிகண்டன்(20) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story