மணலூர்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தல் டிரைவர் உள்பட 3 பேர் கைது
மணலூர்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தல் டிரைவர் உள்பட 3 பேர் கைது
திருக்கோவிலூர்
மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன் மற்றும் செல்வம், ஏட்டு ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் முருகக்கம்பாடி கிராமத்தில் உள்ள சோதனைசாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 100 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சங்கராபுரம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் அசோக்(வயது 36), விளந்தை சாமிக்கண்ணு மகன் சதீஷ்(27), டிரைவர் எடையூர் நேரு மகன் தினகரன்(21) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் மினி லாரியுடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மினி லாரி உரிமையாளர் கோவிந்தன் மகன் ஜெயராமன்(26) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story