பெரியகுளத்தில் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு
பெரியகுளத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தாார்.
தேனி:
பெரியகுளத்தில் நகர்புற சுகாதார நிலையம் மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நேற்று நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்கள் சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
பின்னர், தேவதானப்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், உணவு போன்றவை குறித்து மருத்துவ குழுவினரிடம் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, தாசில்தார் இளங்கோ, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story