கொரோனா பயத்தால் தலையில் வேப்பிலையுடன் சுற்றும் முதியவர்


கொரோனா பயத்தால் தலையில் வேப்பிலையுடன் சுற்றும் முதியவர்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:14 PM IST (Updated: 2 Jun 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் பகுதியில், கொரோனா பயத்தால் தலையில் வேப்பிலையுடன் சுற்றும் முதியவர்.

திருக்கனூர்,

திருக்கனூர் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருக்கனூர் சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரை சேர்ந்த பூங்காவனம் (வயது 65) என்பவர் தலையில் வேப்பிலையுடன் கடைவீதிகளில் சுற்றி வருகிறார். கொரோனா பயத்தால் வேப்பிலையுடன் சுற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார். வேப்பிலையுடன் வலம் வரும் அவரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

Next Story