ரேஷன் பொருட்கள் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்


ரேஷன் பொருட்கள் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:15 PM IST (Updated: 2 Jun 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் பொருட்கள் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்:

ஊரடங்கு அமலில் இருப்பதால் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன. எனினும், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் ரேஷன்கடைகள் கடந்த வாரம் திறக்கப்பட்டது. 

இதற்கிடையே இந்த மாதத்துக்கான ரேஷன்பொருட்கள் மக்களுக்கு வழங்க வேண்டியது இருக்கிறது. ஆனால், கொரோனா பரவல் ஓரளவு தான் குறைந்து இருக்கிறது. எனவே, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி ரேஷன்கடைகளில் பொருட்களை வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.

 இதையடுத்து ரேஷன்கடைகளில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க தினமும் குறிப்பிட்ட அளவிலான ரேஷன்கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரேஷன்கார்டுதாரர்களின் வீட்டுக்கு சென்று டோக்கன் வழங்கப்படுகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 6 லட்சத்து 42 ஆயிரம் ரேஷன்கார்டுகள் உள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 1,035 ரேஷன்கடைகள் செயல்படுகின்றன. 

இந்த ரேஷன்கடைகளில் தினமும் அதிகபட்சமாக 200 ரேஷன்கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் வருகிற 5-ந்தேதி முதல் வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

 இதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி ரேஷன்கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.

Next Story