திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 24 படுக்கைகள் கொண்ட தனி வார்டு
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் 24 படுக்கைகள் கொண்ட தனி வார்டை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
திருக்கோவிலூர்
கொரோனா பாதிப்பு
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கோ அல்லது விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கோ கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
எனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதி செய்த தர வேண்டும் என திருக்கோவிலூர் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தனி வார்டு
இதை அடுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளுடன் 24 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணி முடிவடைந்ததை அடுத்து திறப்பு விழா நடைபெற்றது. இதை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா முன்னிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனி வார்டை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான புகழேந்தி, தாசில்தார் சிவசங்கரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதீஷ் குமார், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் தங்கம், ரவிச்சந்திரன், பிரபு, விஸ்வநாதன், நகர செயலாளர் கோபி என்கிற கோபிகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் துணைத் தலைவர் குணா என்கிற குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சங்கர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கராஜ், வெங்கட், சக்திவேல், தொ.மு.ச. நிர்வாகி சரவணன், நகர இளைஞர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பாலமுருகன், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆதி நாராயணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிவாரண உதவி
முன்னதாக திருக்கோவிலூர் அருகே உள்ள டீ குன்னத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அஞ்சலி, ஏழுமலை மற்றும் வீரன் ஆகிய 3 பேரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிஅமைச்சர் பொன்முடி நிவாரண நிதி மற்றும் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் 3 குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
Related Tags :
Next Story