நீலகிரியில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
நீலகிரியில் கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று புதியதாக 579 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 241 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் 460 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16 ஆயிரத்து 73 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நீலகிரியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 4 ஆயிரத்து 68 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரியில் மொத்தம் 351 ஆக்சிஜன் படுக்கைகளில், 312 படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும், தற்போது 39 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story