திருவாரூரில் ரூ.16 கோடியே 34 லட்சத்தில் தூர்வாரும் பணி


திருவாரூரில் ரூ.16 கோடியே 34 லட்சத்தில் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 2 Jun 2021 10:57 PM IST (Updated: 2 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ரூ.16 கோடியே 34 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியினை கணிப்பாய்வு அதிகாரி கோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்:
திருவாரூரில் ரூ.16 கோடியே 34 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியினை கணிப்பாய்வு அதிகாரி கோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூர்வாரும் பணி 
திருவாரூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஓடம்போக்கியாறு, ரூ.26 லட்சம் மதிப்பில் கொட்டாரக்குடி பகுதியில் உள்ள காட்டாறு ஆகியவற்றில் தூர்வாரும் பணி நடைெபற்று வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளரும், கணிப்பாய்வு அதிகாரியுமான கோபால் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது கணிப்பாய்வு அதிகாரி கோபால் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் காவிரி வடிநில கோட்டம் தஞ்சாவூர் மூலம் ரூ.3 கோடியே 56 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 48 பணிகள், வெண்ணாறு வடிநில கோட்டம் தஞ்சாவூர் மூலம் ரூ.5 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 50 பணிகள், வெண்ணாறு வடிநில கோட்டம் திருவாரூர் மூலம் ரூ.7 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் 75 பணிகள், அக்னியாறு வடிநில கோட்டம் பட்டுக்கோட்டை மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பணி என திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 174 பணிகள் நடைபெற்றுள்ளது.
விரைந்து முடிக்க உத்தரவு 
இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட வேலூர் வாய்க்கால், முல்லையாறு, கொத்தமங்கலம் வாய்க்கால், சாழுவனாறு வாய்க்கால், புதூர் வடிக்கால், பாலம் பாண்டி வாய்க்கால், விழுவப்படிக்கை வடிகால் ஆகிய பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் கணிப்பாய்வு அதிகாரி கோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், கண்ணப்பன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, உதவி பொறியாளர்கள் சிதம்பரநாதன், மாணிக்கவேல், கோவிந்தராஜ், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story