விருத்தாசலம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மங்கலம்பேட்டை மேல வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில் நகர துணைத் தலைவர் அபுசாலிஹ், சபியுல்லா, பஜ்ருதீன், நைனா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், அண்டகுளத்தார் தெருவில் நகர தலைவர் அப்துல் ரவூப் தலைமையிலும், உம்மா ஹபீபா மஸ்ஜித் அருகே நகர செயற்குழு உறுப்பினர் அபுல் ஹஸன் தலைமையிலும், மில்லத் நகர் 2-வது வார்டு பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சென்னை மண்டலத் தலைவர் மவுலவி ஆயிருத்தீன் மன்பயீ தலைமையிலும், அலியார் நகரில் நகர இணை செயலாளர் மைதீன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
த.மு.மு.க.-ம.ம.க.
இதேபோல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மங்கலம்பேட்டையில் உள்ள 2-வது வார்டு பகுதி மற்றும் புல்லூர் ஆகிய பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கடலூர் மாவட்ட பொருளாளர் அசன் முகமது தலைமை தாங்கினார். ம.ம.க. துணை செயலாளர் லியாக்கத் அலி, மாவட்ட ஊடகப்பிரிவு பொருளாளர் சையது முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், த.மு.மு.க., நகர தலைவர் சாதிக்அலி, அபூபக்கர், சாதிக் பாட்சா, முகமது யூனுஸ், பரக்கத் அலி, முஹம்மத் ரியாஸ், முன்னாள் நிர்வாகி உமர் பாரூக், சமூக நீதி மாணவர் அமைப்பின் பிரமுகர் அஷ்ரப் அலி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
திட்டக்குடி
திட்டக்குடியில் த.மு.மு.க. சார்பில் அதன் நிர்வாகிகள் அவர்களது வீடுகளிலேயே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய தலைவர் ஆட்டோ அமானுல்லா, நகர செயலாளர் அம்சாமுகமது, கிளை செயலாளர் அன்சாரி முஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
லால்பேட்டை
லால்பேட்டையில் த.மு.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முகமது ஆரிஸ் தலைமை தங்கினார். நகர தலைவர் பைசல், நகர செயலாளர் முகமதுஅலி, மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் ஜசூர் அகமது, நகர பொருளாளர் சபிகுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது அன்சாரி, முகமது அயூப், அமானுல்லா, அப்துல் சமது, நூருல் அலீம் முகமது அலி, ஆகியோர் கலந்து கொண்டு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், நூருல் அலீம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story