கோவையில் இன்று 3,061 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று 25 ஆயிரத்து 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 25 ஆயிரத்து 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 32 ஆயிரத்து 263 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 34 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு இன்றைய விவரம்:-
அரியலூர் - 282
செங்கல்பட்டு - 996
சென்னை - 2,217
கோவை - 3,061
கடலூர் - 595
தர்மபுரி - 332
திண்டுக்கல் - 349
ஈரோடு - 1,488
கள்ளக்குறிச்சி - 363
காஞ்சிபுரம் - 527
கன்னியாகுமரி - 826
கரூர் - 415
கிருஷ்ணகிரி - 480
மதுரை - 572
நாகை - 674
நாமக்கல் - 809
நீலகிரி - 579
பெரம்பலூர் - 236
புதுக்கோட்டை - 283
ராமநாதபுரம் - 260
ராணிப்பேட்டை - 406
சேலம் - 1290
சிவகங்கை - 211
தென்காசி - 309
தஞ்சாவூர் - 920
தேனி - 459
திருப்பத்தூர் - 330
திருவள்ளூர் - 735
திருவண்ணாமலை - 342
திருவாரூர் - 629
தூத்துக்குடி - 411
திருநெல்வேலி - 347
திருப்பூர் - 1,252
திருச்சி - 882
வேலூர் - 366
விழுப்புரம் - 605
விருதுநகர் - 479
மொத்தம் - 25,317
Related Tags :
Next Story