திருவாரூர் மாவட்டத்தில், முன்கள பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் காமராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்


திருவாரூர் மாவட்டத்தில், முன்கள பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் காமராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 2 Jun 2021 11:43 PM IST (Updated: 2 Jun 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில், முன்கள பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை காமராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.

குடவாசல்,

குடவாசல் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சியில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரிசி, காய்கறி பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாப்பா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காமராஜ் கலந்துகொண்டு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், முன் கள பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி பொருட்கள் அடங்கிய ைபகளை வழங்கினார்.

நன்னிலம்

நன்னிலம், பேரளம் பேரூராட்சியில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முன்கள பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் காய்கறி பொருட்களை வழங்கினார். இதில் முன்னாள் எம்.பி. கோபால், ஒன்றிய செயலாளர்கள் ராம.குணசேகரன், அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

வலங்கைமான் பேரூராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்கள் 30 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை காமராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் நகராட்சி முன் களப்பணியாளர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர் அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர்அகமது, துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅஸ்ரப், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கூத்தாநல்லூர் நகராட்சி முன் களப்பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பொன் வாசுகிராம், மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் பேரூராட்சியில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவியாக அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேற்று வழங்கினார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவி பொருட்களை வழங்கினார். இதில் முன்னாள் நகர சபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story