மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த மணிபர்சை ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு + "||" + Praise

சாலையில் கிடந்த மணிபர்சை ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

சாலையில் கிடந்த மணிபர்சை ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
சாலையில் கிடந்த மணிபர்சை ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.
கரூர்
வேலாயுதம்பாளையம் வள்ளூவர் நகரை சேர்ந்த மஞ்சு. இவரது தாய்-தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் கடந்த மாதம் 31-ந்தேதி சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தார். பின்னர் அன்று மாலை மருத்துவமனையில் அருகில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மிற்கு பணம் எடுப்பதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் மணிபர்சு ஒன்று கிடந்தது. இதையடுத்து அதை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.31 ஆயிரத்து 300 மற்றும் வங்கி ஏ.டி.எம். கார்டும் இருந்தது. இதையடுத்து அந்த மணிபர்சை அப்பகுதியில் சோதனை சாவடியில் பணியில் இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் வினேகாஸ்ரீயிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அவர் கீழே கிடந்த வங்கி ஏ.டி.எம். கார்டு மூலம் மணிபர்சு யாருடையது என்று வங்கி மூலம் விசாரித்ததில், அது புலியூர் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருடையது தெரியவந்தது. இதையடுத்து பெண் போலீஸ் வினேகாஸ்ரீ அந்த மணிபர்சை புவனேஸ்வரியை நேரில் சந்தித்து ஒப்படைத்தார். இதையடுத்து நேர்மையாக பணியாற்றிய பெண் போலீஸ் வினேகாஸ்ரீயையும், கீழே கிடந்த மணி பர்சை எடுத்து கொடுத்த மஞ்சுவையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அப்போது கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு
ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனை அனைவரும் பாராட்டினர்.
2. 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களுக்கு அமைச்சர் பாராட்டு
5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களை அமைச்சர் பாராட்டினார்.
3. பாராட்டு
யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
4. வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு
வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு
5. தமிழகத்தில் சாலை விபத்துகள் 50% குறைவு: மத்திய மந்திரி பாராட்டு
தமிழகத்தில் சாலை விபத்துகள் 50% அளவுக்கு குறைந்துள்ளதற்கு மத்திய மந்திரி கட்காரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.