செட்டியக்காபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு பொதுமக்கள் அச்சம்
செட்டியக்காபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு பொதுமக்கள் அச்சம்
நெகமம்
நெகமம் அருகே உள்ள செட்டியக்காபாளையம் கிழக்கு பகுதியில் பாறைகாடு செல்லும் வழியில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) ஒன்று உள்ளது.
இங்கிருந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும், தோட்டங்களுக்கும் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி மின்கசிவு ஏற்பட்டு, தீப்பொறி பறக்கிறது.
இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செட்டியக்காபாளையத்தில் இருந்து பாறைகாடு செல்லும் வழியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி மின்கசிவு ஏற்பட்டு, தீப்பொறி பறக்கிறது.
இதனால் அந்த வழியாக தோட்டங்களுக்கு செல்பவர்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரான்ஸ்பார்மர் அருகில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளன.
இதனால் தீப்பொறி பறந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதுடன், அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது. எனவே டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story