முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முஸ்லிம் தெருவில் வீட்டின் முன்பு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர், ம.ம.க. மாவட்டத் துணைச் செயலாளர் சகாபுதீன், த.மு.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சல்மான் ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை கொரோனா காலத்திலும் நிறைவேற்ற முயலும் பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் ஜபரூல்லாகான், த.மு.மு.க. நகரச் செயலாளர் முகைதீன் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story