மாவட்ட செய்திகள்

எரிந்த நிலையில் ஆண் பிணம் + "||" + death

எரிந்த நிலையில் ஆண் பிணம்

எரிந்த நிலையில் ஆண் பிணம்
ராஜபாளையத்தில் எரிந்தநிலையில் ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டது. கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் எரிந்தநிலையில் ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டது. கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
எரிந்த நிலையில் உடல் 
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள தாலுகா அலுவலக சுற்றுச்சுவருக்கு பின்புறம் எரிந்த நிலையில் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில், வடக்கு இன்ஸ்பெக்டர் தெய்வம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்து கருகிய நிலையில் கிடந்தது. 
போலீசார் விசாரணை 
முகம் கருகிய நிலையில் இருந்ததால் அவர் யார் என்பது குறித்து அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இறந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
விருதுநகர் அருகே குளிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
2. மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்; மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
3. தகராறில் கீழே விழுந்த வாலிபர் சாவு
தகராறில் கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
4. விபத்தில் தொழிலாளி சாவு
திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார்.
5. மொபட் மீது கார் மோதி தீப்பற்றி எரிந்தன; விவசாயி சாவு
மொபட் மீது கார் மோதியதில் 2 வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.