பட்டாசு தயாரித்த வாலிபர் கைது
வெம்பக்கோட்ைட அருகே பட்டாசு தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரியப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் தாயில்பட்டி, கலைஞர்காலனி, கணஞ்சாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். கணஞ்சாம்பட்டியை சேர்ந்த குமார் (வயது 28) என்பவர் விவசாய தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு தயாரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் அறையில் இருந்த 30 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்து, குமாரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story