நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. எனவே வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என “தினத்தந்தி”யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வத்திராயிருப்பு, ராமசாமிபுரம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து உடன் நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட “தினத்தந்தி”க்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story