ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் வாங்க வீடுகள் தோறும் டோக்கன் வினியோகம்


ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் வாங்க வீடுகள் தோறும் டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 3 Jun 2021 1:05 AM IST (Updated: 3 Jun 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் வாங்க வீடுகள் தோறும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது

பெரம்பலூர்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் காரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டோக்கன் வினிேயாகம்
கொரோனா காலகட்டமாக இருப்பதால் பொதுமக்கள் அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் மளிகை பொருட்கள் பெறும் வகையில் வீடுகள் தோறும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு அதன்படி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகளில் இந்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர்.



Next Story