கொலை வழக்கில் தந்தை-மகன் கைது
கொலை வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்
அரியலூர்
அரியலூர் அருகே உள்ள சிறுவளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், சாமிநாதன். விவசாயிகள். கடந்த 31-ந் தேதி கோவிந்தராஜ் மனைவி சின்னப்பொண்ணு, தனது வீட்டுக்கு அருகே உள்ள நிலத்தில் கருவேப்பிலை பறித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த சாமிநாதன் மனைவி செல்லப்பாங்கி, இதுகுறித்து சின்னப்பொண்ணுவிடம் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்த சாமிநாதன், மனைவியுடன் சேர்ந்து கொண்டு சின்னப்பொண்ணுவை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவிந்தராஜ், அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தட்டிக் கேட்டபோது 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில், கோவிந்தராஜ் (56), தர்மராஜ் (37) ஆகிய இருவரும் விறகு கட்டையால் சாமிநாதனை அடித்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சாமிநாதனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமிநாதன் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந் தேதி உயிரிழந்தார்.
தந்தை-மகன் கைது
இதுகுறித்த புகாரின்பேரில், அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வயல்காட்டில் மறைந்திருந்த கோவிந்தராஜ் அவரது மகன் தர்மராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story