மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று


மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
x
தினத்தந்தி 3 Jun 2021 1:24 AM IST (Updated: 3 Jun 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுநோய் பாதிப்பு சிலருக்கு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் கீழக்கரையை சேர்ந்த ஒருவர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் பரமக்குடி மற்றும் திருவாடானை பகுதியைச் சேர்ந்த இருவருக்கு அந்த தொற்று அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. இதைதொடர்ந்து பரிசோதனை செய்து பார்த்ததில் நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் வித்தானூர் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன்(வயது 56) என்பவர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீட்டிற்குச் சென்ற நிலையில் அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இருப்பதாக உணர்ந்துள்ளார். அவர் நேற்று காலை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருப்பது போல் தெரிந்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story