அரியலூரில் கொரோனாவுக்கு 5 பேர் பலி


அரியலூரில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 3 Jun 2021 1:44 AM IST (Updated: 3 Jun 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்தனர்

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 282 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,806 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஆண்கள் 3 பேரும், பெண்கள் 2 பேரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 2,320 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story