மண்ணச்சநல்லூர் அருகே ஒரே கிராமத்தில் 52 பேருக்கு கொரோனா


மண்ணச்சநல்லூர் அருகே ஒரே கிராமத்தில் 52 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Jun 2021 1:48 AM IST (Updated: 3 Jun 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே ஒரே கிராமத்தில் 52 பேருக்கு கொரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சமயபுரம், 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சமயபுரம் அருகே உள்ள இருங்கலூர் ஊராட்சி, கோவத்தகுடி ஊராட்சி, திருப்பைஞ்சீலி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மண்ணச்சநல்லூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையில் மருத்துவகுழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், கோவத்தகுடியில் 52 பேருக்கும், திருப்பைஞ்சீலியில் 8 பேருக்கும், மேட்டுஇருங்கலுரில் 4 பேருக்கும், புறத்தாக்குடியில் 6 பேருக்கும் கொரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தொற்றுபாதிப்பு அதிகம் உள்ளவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள நபர்களை வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரே கிராமத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Next Story