பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை


பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை
x
தினத்தந்தி 3 Jun 2021 1:49 AM IST (Updated: 3 Jun 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது

வேப்பந்தட்டை
பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பாலையூர், அனுக்கூர், அன்னமங்கலம், அரசலூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் பலரது தோட்டங்களில் வாழைமரம் முறிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும் சாலைகளில் உலர வைக்கப்பட்டிருந்த எள், உளுந்து நனைந்தன. பலத்த சூறாவளிக் காற்றினால் வேப்பந்தட்டை பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Next Story