திருச்சியில் வாகன சோதனை: 21 கிலோ கஞ்சாவுடன் கார் பறிமுதல்; 3 பேர் கைது
திருச்சியில் முழு ஊரடங்கின்போது நடந்த வாகன தணிக்கையில் 21 கிலோ கஞ்சாவுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
திருச்சியில் முழு ஊரடங்கின்போது நடந்த வாகன தணிக்கையில் 21 கிலோ கஞ்சாவுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சாவுடன் கார்
திருச்சி உறையூர் பகுதியில் கார் ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிராஜ் தலைமையிலான போலீஸ் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
உறையூர் கோணக்கரை டாஸ்மாக் கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் ஒரு சாக்குமூட்டையில் 21 கிலோ கஞ்சா பொட்டலம், பொட்டலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
விசாரணையில், தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, திருச்சியில் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கஞ்சா மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
மேலும் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த உறையூர் சீனிவாசா நகர் 12-வது குறுக்குத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 24), உறையூர் குமரன் நகர் பேங்கர்ஸ் காலனியை சேர்ந்த அருள் ஆனந்தன் (34), நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த லட்சுமணன் (27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திருச்சி தேவதானத்தை சேர்ந்த மில்டன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story