நெல்லையில் காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள்
நெல்லையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா தொற்று முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவில் பூசாரிகள், பள்ளிவாசலில் பாங்கு சொல்பவர்கள், கிறிஸ்தவ ஆலய பணியாளர்கள் என மொத்தம் 100 பேருக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு, 100 பேருக்கு அரிசி, பலசரக்கு, காய்கறிகள் போன்றவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story