அம்பையில் கால்வாய் தூர்வாரும் பணி


அம்பையில் கால்வாய் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 3 Jun 2021 2:07 AM IST (Updated: 3 Jun 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது.

அம்பை:
அம்பை நதியுண்ணி கால்வாய் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நதியுண்ணி கால்வாயின் கிளைக் கால்வாயான 19-ம் நம்பர் ஜமீன்மடை வழியாக ஊர்க்காடு, சாட்டு பத்து வரை செல்லும் கால்வாயில் அமலைச் செடிகளும், குப்பைகளும் தேங்கி கிடந்தது. இதை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வார நடவடிக்கை எடுத்தார். இதற்கான பணிகளை மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு, அ.தி.மு.க. நகர செயலாளர் அறிவழகன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் தொடங்கி வைத்தனர்.

Next Story