சுட்டெரித்த வெயிலை விரட்டிய மழை
திண்டுக்கல்லில் சுட்டெரித்த வெயிலை விரட்டும் வகையில் நேற்று மழை பெய்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை.
ஆனால் வீட்டில் முடங்கி கிடப்பதைவிட வெயிலில் சுற்றித்திரியலாம் என நினைத்த பலர் இரு சக்கர வாகனங்களில் நகர் பகுதியில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மாலையில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன.
பின்னர் 6.30 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
இதன் காரணமாக நாகல்நகர் சாலை, ரவுண்டு ரோடு, பஸ் நிலையம் அருகில், திருச்சி சாலை என நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
கொட்டும் மழையிலும் சிலர் நனைந்தபடி வாகனங்களில் வீடுகளுக்கு சென்றனர்.
பகல் முழுவதும் சுட்டெரித்த வெயிலை விரட்டும் வகையில் மாலையில் மழை கொட்டி தீர்த்தது. இதேேபால் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்தது.
Related Tags :
Next Story