வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை பெருமாள்புரம் அருகே உள்ள ஆயன்குளத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாஸ்கர் (வயது 21). இவர் லாரி மெக்கானிக்காக இருந்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட பாஸ்கர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story