ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, பழனி ஆகிய இடங்களில் த.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்:
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் இம்தியாஸ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அலாவுதீன் முன்னிலை வகித்தார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முகமது ரிஜால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் கனவாபீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல் பழனி மதினாநகரில், த.மு.மு.க. நகர தலைவர் முகமது தவ்பிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆயக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாரூக் தலைமை தாங்கினார்.
துணை செயலாளர் ரியாஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story