பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
கொடைக்கானலில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு நாளான நேற்று மறுபூஜை நடந்தது.
கொடைக்கானல் :
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 15 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் இந்த ஆண்டு திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் கோவிலுக்கு வெளியில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மறுபூஜை நடைபெற்றது. இதற்காக சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை கோவிலுக்கு வெளியில் நின்றபடி பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து தரிசனம் செய்தனர். இருப்பினும் கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Related Tags :
Next Story