தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
பாவூர்சத்திரம் அருகே தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கீழப்பாவூரில் நகர அ.தி.மு.க. சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூர் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். சென்டிரல் வங்கி அருகில், வாணியர் பிள்ளையார் கோவில் தெரு, கீரைத்தோட்டத்தெரு, பஜார் காந்தி சிலை, வடக்கு பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, இளைஞரணி செயலாளர் கணபதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராதா, ஒன்றிய செயலாளர் இருளப்பன், நகர செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முக்கூடலில் அமைந்துள்ள பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களுக்கும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தையில் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் அஷ்ரப் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மங்கலம் என்ற கோமதி, குமரன், சுகாதார ஆய்வாளர் அக்பர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story