தமிழக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் 8-வது இடத்தில் நாமக்கல்
தமிழக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் 8-வது இடத்தில் நாமக்கல்.
நாமக்கல்,
தமிழக அளவில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும், சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மக்கள் தொகை அடிப்படையில் சிறிய மாவட்டமான நாமக்கல் மாவட்டம் தமிழக அளவில் தினசரி பாதிப்பில் 8-வது இடத்தை பிடித்து இருப்பது, மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
இந்த மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நேற்று முன்தினம் 914 ஆகவும், கடந்த 31-ந் தேதி 983 ஆகவும் இருந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தினசரி 2 ஆயிரம் முதல் 2,500 வரை மட்டுமே மாதிரி எடுக்கப்பட்டது. தற்போது 4 ஆயிரம் முதல் 4,500 வரை சளி மாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவே தினசரி பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். விரைவில் இந்த எண்ணிக்கை குறையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story