தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு


தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு
x
தினத்தந்தி 3 Jun 2021 8:49 AM IST (Updated: 3 Jun 2021 8:49 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மரசாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று இரவு பணியில் இருந்த பீகாரைச் சேர்ந்த கான்ஷாம் மாஜித் (வயது 31) என்ற தொழிலாளியின் உடலில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story