படிப்படியாக குறைந்து வருகிறது: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 735 பேர் பாதிப்பு


படிப்படியாக குறைந்து வருகிறது: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 735 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 8:59 AM IST (Updated: 3 Jun 2021 8:59 AM IST)
t-max-icont-min-icon

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் கடந்த 5 நாட்களாக இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 735 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் கடந்த 5 நாட்களாக இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 735 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 94 ஆயிரத்து 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,427 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 17 பேர் இறந்து உள்ளனர்.

Next Story