தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலை விரிவாக்கம் பணி: பெண் வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்


தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலை விரிவாக்கம் பணி: பெண் வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2021 9:20 AM IST (Updated: 3 Jun 2021 9:20 AM IST)
t-max-icont-min-icon

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலை விரிவாக்கம் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சியில் தனியார் காற்றாலை இறக்கை தயார் செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் தயார் செய்யும் பொருட்களை லாரியில் ஏற்றி செல்ல வசதியாக வெங்கல்-திருநின்றவூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிக்காக தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையின் மேற்கு திசையில் உள்ள பஸ் நிறுத்தத்தை அகற்றிவிட்டு சாலை விரிவாக்கப்பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட நடைபாதை பெண் வியாபாரிகள் பல வருடமாக கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறையினர் நேற்று கூறியுள்ளனர். இதனால் 10-க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள் கையில் கருப்பு கொடியை ஏந்தி வெங்கல்-திருநின்றவூர் நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே நின்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெங்கல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Next Story