ஆகஸ்டு 27-ந்தேதி கடைசி நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ள கால அவகாசம் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு


ஆகஸ்டு 27-ந்தேதி கடைசி நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ள கால அவகாசம் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 10:50 AM IST (Updated: 3 Jun 2021 10:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் பதிவு செய்து 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்டு 27-ந்தேதிக்குள், http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். ஆன்-லைன் மூலமாக புதுப்பிக்க முடியாதவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம்.

மேலும் கிண்டியில் இயங்கும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story