கதக்கில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மாமனார்-மருமகன் கைது


கதக்கில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மாமனார்-மருமகன் கைது
x
தினத்தந்தி 3 Jun 2021 8:14 PM IST (Updated: 3 Jun 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பெங்களூரு, 

கதக் புறநகர் குலகோட்டை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு ஏராளமான மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அம்ருதேஷ்வர், அவரது மருமகன் ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மாமனார் மற்றும் மருமகன் இரண்டு பேரும் ஊரடங்கை பயன்படுத்தி மதுபானங்களை அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து ரூ, 1.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கைதான 2 பேர் மீதும் கதக் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story