பெண் சாராய வியாபாரி கைது


பெண் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 3 Jun 2021 8:37 PM IST (Updated: 3 Jun 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம், 

விழுப்புரம் இந்திரா தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் மனைவி பூங்கொடி (வயது 37). இவர் மீது விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் பூங்கொடியை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் பூங்கொடியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து பூங்கொடியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், வேலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story