மேலும் 448 பேருக்கு கொரோனா 4 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகினர்.
விருதுநகர், ஜூன்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகினர்.
குறைவு
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,043 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இது வரை 31 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
6 ஆயிரத்து 924 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாயினர். இதனால் பலி எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது.
படுக்கைகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் 1,157 படுக்கைகள் உள்ள நிலையில் 852 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 305 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா சிகிச்சை மையங்களில் 1,573 படுக்கைகள் உள்ள நிலையில் 673 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 900 படுக்கைகள் காலியாக உள்ளன. இம்மாவட்டத்தில் நேற்றும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் பாத்திமா நகர், அழகர்சாமி நகர், சூலக்கரை, அரசு ஆஸ்பத்திரி, சிவஞானபுரம் குருசாமி கொத்தன்தெரு, எல்.பி.எஸ்.நகர், கே.உசிலம்பட்டி, என்.ஜி.ஓ காலனி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம், செங்குன்றாபுரம், ஆமத்தூர், பெரிய தாதம்பட்டி, அகமதுநகர், பாண்டியன் நகர், ரோசல்பட்டி, சத்திர ரெட்டியபட்டி, சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, கத்தாளம்பட்டி தெரு, வச்சக்காரப்பட்டி, ஒண்டிப்புலி, காந்தி நகர், ஜெயராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அகதிகள் முகாம்
மேலும் முக்குளம், அகத்தாக்குளம், இசலி முடுக்கன்குளம், செட்டிபட்டி, குல்லூர்சந்தை அகதிகள் முகாமில் 10 பேர், அரசகுடும்பன்பட்டி, எம்.ரெட்டியபட்டி, புதூர், கல்லூரணி, மடத்துப்பட்டி, முடுக்கன்குளம், குருணைகுளம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாவட்ட பட்டியலில் 209 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில பட்டியலில் 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story